News April 6, 2025

குமரியில் 120 அங்கன்வாடி பணியாளர்கள் நியமனம் – ஆட்சியர் 

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் குமரி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 120 அங்கன்வாடி பணியாளர், 2 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும்11 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்காக இம்மாதம் 22 ஆம் தேதி வரை அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Similar News

News August 5, 2025

குமரியில் மதபோதகர் போக்சோவில் கைது!

image

கன்னியாகுமரி: தக்கலைப் பகுதில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் மூலச்சல் பகுதியைச் சார்ந்த வர்கீஸ்(55) என்பவர் மத போதகராக இருந்து வருகிறார். இவர் கிறிஸ்தவசபையில் வேதாகம வகுப்பிற்கு வந்த 16 வயது சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். இதுபற்றி சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின்போரில், தக்கலை போலீசார் மதபோதகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News August 5, 2025

குமரி ரயில் நிலைய விரிவாக்க பணிகள் தீவிரம்

image

கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருவதைத் தொடர்ந்து கன்னியாகுமரி ரயில் நிலையம் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது அங்கு புதிய மின் நிலையம், பயணிகளுக்கு தேவையான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

News August 4, 2025

குமரியில் 7 காவல் நிலையங்கள் தரம் உயர்வு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம், தென் தாமரைக்குளம், அஞ்சு கிராமம், கொற்றிக்கோடு, பளுகல், கடையால மூடு, மண்டைக்காடு ஆகிய 7 காவல் நிலையங்கள் தற்போது உதவி ஆய்வாளர் காவல் நிலையங்களாக இருந்து வருகிறது. இந்த 7 காவல் நிலையங்களும் ஆய்வாளர் அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

error: Content is protected !!