News April 3, 2024
குமரியில் 10 மணி வரை மழை!

நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று(ஏப்.3) காலை 10 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்களில், காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக, இன்று தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Similar News
News April 4, 2025
குமரியில் 3 நாள் போக்குவரத்து மாற்றம்

நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலையில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு சொந்தமான உயர் அழுத்த புதைவடம் பழுதை சரி செய்யும் பணி நடைபெற இருப்பதால் நாளை(ஏப்ரல்.5 முதல் 7ஆம்)தேதி வரையிலும் பார்வதிபுரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் வழியாக மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது என நாகர்கோவில் மின் விநியோக செயற்பொறியாளர் கூறியுள்ளார்.ஷேர் செய்யவும்.
News April 4, 2025
குமரியில் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் உற்பத்தி நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட இயந்திர ஆப்ரேட்டர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <
News April 4, 2025
கேரளா கார் மோதி பெரும் விபத்து

நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது, மது போதைகள் ஒட்டி வரப்பட்ட கேரளப்பதிவு எண் கொண்ட கார் மோதி பெரும் விபத்து. விபத்து ஏற்படுத்திய கேரளா பதிவு எண் கொண்ட காரின் ஓட்டுனர் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் அதிகம் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.