News July 24, 2024
குமரியில் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல். இந்த மூன்று மாவட்டங்களிலும் மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 9, 2025
குமரி: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

விரிகோடு பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர் நேசமணி(62). 2020-ம் ஆண்டு இவர் அதேபகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது தொடர்பாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் நீதிபதி சுந்தரய்யா, நேசமணிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
News November 9, 2025
குமரி: விபத்தில் சிக்கியவர் மருத்துவமனையில் உயிரிழப்பு

திற்பரப்பு பழைய பாலம் சாலையை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). கூலித் தொழிலாளியான இவர் நவ.5-ம் தேதி வீட்டு முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வேன் இவர் மீது மோதியுள்ளது. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட செல்வராஜ் சிகிட்சை பலனளிக்காமல் இன்று (நவ.8) உயிரிழந்தார். இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 8, 2025
குமரி: இளம் பெண் தற்கொலை

கீழமறவன் குடியிருப்பு டெம்போ டிரைவர் செல்வசரண் மற்றும் ரேஷ்மா ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர். கடந்த நவ.6ம்தேதி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ரேஷ்மா ராஜபாளையத்தில் உள்ள தனது தாயாருக்கு செல்போனில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக்கூறி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுக்குறித்து கோட்டார் போலீசார் விசாரணை.


