News April 25, 2025

குமரியில் வாடகைக்கு வேளாண் கருவிகள் ஆட்சியர் தகவல்

image

குமரி மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் விவசாயிகள் டிராக்டரால் இயங்கக்கூடிய சுழல்கலப்பை 5, கொத்துக்கலப்பை 9 உள்ளிட்ட கருவிகள் டிராக்டருடன் குறைந்தது 2 மணி நேரமும், அதிகபட்சமாக 20 மணி நேரமும் முன்பணமாக செலுத்தி வாடகைக்கு பெறலாம். டிராக்டர் (இணைப்புக்கருவிகள் உட்பட) மூலம் 1 மணி நேரம் பணிகள் மேற்கொள்வதற்கு ரூ.500 என்ற குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 25, 2025

மின்விபத்துகளைத் தடுப்பது குறித்து அதிகாரி விளக்கம்

image

குமரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வைபொறியாளர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், கோவில் திருவிழாக்கள், பண்டிகை காலங்களில் அலங்கார விளக்குகள் அமைக்கும் போது அருகில் செல்லும் மின் கம்பிகளை கவனத்தில் கொண்டு போதிய இடைவெளி விட்டு அமைக்க வேண்டும். பந்தல் அமைக்கும் போது அலங்கார விளக்குகள் அமைக்கும் போதும், உயரமான ஏணியை பயன்படுத்தும் போது மின் கம்பிகளில் உரச வாய்ப்பிருப்பதால் கவனமாக கையாள வேண்டும் என்றார்.

News April 25, 2025

குமரியில் 13,000 புதிய காப்பீட்டாளர்கள் காப்பீடு செய்துள்ளனர்

image

குமரி மாவட்ட தபால் துறையில் கிராமிய தபால் ஆய்வு காப்பீடு திட்டத்தில் ரூ.178 கோடியும், தபால் ஆயுள் காப்பீடு திட்டத்தில் ரூ.275 கோடியும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் புதிதாக 13,000 பயனாளிகள் காப்பீடு செய்து இணைந்துள்ளனர். ஆதார் பதிவு, திருத்த சேவைகள் மூலம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 336 பயனாளிகளும், புதிய பாஸ்போர்ட் மற்றும் புதுப்பித்தல் சேவையின் மூலம் 18,484 பயனாளிகள் பயன் அடைந்தனர்.

News April 25, 2025

குமரி: ரூ.19,900 ஊதியத்தில் உதவி லோகோ பைலட் பணி

image

மதுரை ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 பணியிடங்கள் உள்ள நிலையில் மாத ஊதியமாக ரூ.19900 வழங்கப்படும். இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை rrbchennai.gov.in என்ற ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். குமரி மாவட்ட நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

error: Content is protected !!