News March 6, 2026
குமரியில் வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

குமரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.குமரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04652-291744
2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News March 6, 2026
குமரி – ஹவுரா ரயில் இயக்கத்தில் மாற்றம்

கன்னியாகுமரியில் இருந்து இம்மாதம் 7, 14,21, 28 ஆகிய தேதிகளில் அதிகாலை ஐந்து 50 மணிக்கு புறப்படும் திண்டுக்கல், கொடை ரோடு செல்லாமல் மதுரை, மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக திருப்பி விடப்படும் என்று ரயில்வே நேற்று தெரிவித்துள்ளது.இதைப்போல் ஹைதராபாத் சிறப்பு ரயிலும் திண்டுக்கல், கொடை ரோடு செல்லாமல் மானாமதுரை காரைக்குடி வழியாக திருச்சி செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 6, 2026
குமரியில் நான்கு வட்டாட்சியர்கள் இடமாற்றம்

குமரியில் 4 வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலக நேர்முக உதவியாளர் அஜிதா கிள்ளியூர் வட்டாட்சியராகவும், கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர் தோவாளை வட்டாட்சியராகவும், நிலமெடுப்பு தனி வட்டாட்சியர் வினை தீர்த்தான் பத்மநாபபுரம் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும், தோவாளை வட்டாட்சியர் கோலப்பன் ரயில்வே நிலமெடுப்பு தனி வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
News March 6, 2026
கன்னியாகுமரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு

நாகர்கோவில் மாநகர திமுக மகளிர் அணி அமைப்பாளர் அம்மு, வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவர் இன்று முறைப்படி விருப்ப மனுவை வழங்கினார். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுகவின் முக்கிய நிர்வாகியான இவரது இந்த நடவடிக்கை, தொகுதி உடன்பாடு மற்றும் வேட்பாளர் தேர்வுக் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


