News September 13, 2024
குமரியில் வக்கீல்கள் இன்று கோர்ட் புறக்கணிப்பு

கடந்த மாதம் மதுரை நீதிமன்ற குடும்ப நல கோர்டில் கவுன்சலிங் நடத்த சென்ற வக்கீல்கள் பாலமுருகன், குமரன் ஆகியோரை திருப்பதி என்பவர் தாக்கியதில் இருவரும் காயமடைந்தனர். வக்கீல்களை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்ய போலீசாரை வலியுறுத்தி இன்று (செப்.13) ஒருநாள் நீதிமன்ற பணிகளை புறக்கணிக்கப்பதாக பத்மநாபபுரம் வக்கீல்கள் சங்க துணைத் தலைவர் ஏசுராஜா தெரிவித்தார்.
Similar News
News December 18, 2025
குமரி: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்ற எளிய வழி!

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க
News December 18, 2025
குமரி: டூவீலர் விபத்தில் முதியவர் பலி!

திருவனந்தபுரம் கல்லடச்சான்மூலை பகுதியை சேர்ந்தவர் சந்திரன்(69). இவர் கடந்த டிச.6.ம் தேதி பைக்கில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு பைக்கில் சென்று விட்டு கொல்லங்கோடு வழியாக வரும்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சந்திரன் நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதுகுறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
News December 18, 2025
குமரி: தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

முளகுமூடு கல்லுவிளை பெயிண்டர் லிபின். இவர் டிச.16.ம் தேதி குளச்சல் துறைமுகத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர். குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து லிபினின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


