News May 4, 2024
குமரியில் ரெட் அலெர்ட்!

அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலை ஏற்படவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அலைகள் 1.5 மீட்டர் உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News January 31, 2026
குமரி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 31, 2026
குமரி: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

குமரி மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இங்கு<
News January 31, 2026
குமரி: நகை கடையில் நூதன முறையில் திருட்டு

காஞ்சிரம்கோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ மணிகண்டன். இவர் சாங்கை பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று 50 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் என இருவர் வந்துள்ளனர். இருவரும் நகை வாங்குவது போல் நடித்து மூன்று கிராம் மோதிரம் மற்றும் கம்மலை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


