News December 25, 2025

குமரியில் ரயில் தண்டவாளத்தில் கிடந்த சடலம்!

image

குழித்துறை ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் நேற்று சுமார் 45 வயது நபர் ஒருவர் இறந்து கிடந்தார். நாகர்கோவில் ரயில்வே போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்து இறந்தவர் யார்? என விசாரித்து வருகின்றனர். மேலும், இறந்தவர் கையில் தேர்தலுக்கு வாக்களித்த மை காணப்பட்டதால் கேரளாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தவராக இருக்கலாம் என போலீசார் கூறினர்.

Similar News

News December 25, 2025

குமரி: ரயில் மீது கல் வீசிய சிறுவன் கைது

image

காந்திதாம் – திருநெல்வேலிக்கு வாரம் ஒரு முறை இயக்கப்படும் ஹம்சபர் ரயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் அருகே வந்த போது 16 வயது சிறுவன் ஒருவன் ரயில் பெட்டி மீது கல் வீசியதாக கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர். பின்னர் அந்த சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நெல்லையில் உள்ள சிறார் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

News December 25, 2025

குமரி: விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை!

image

கொடுப்பைக்குழி கட்டிடத்தொழிலாளி சந்திரன் (50). திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.  இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

News December 25, 2025

குமரி: இனி வரிசைல நிக்காதிங்க.. எல்லாமே ONLINE..!

image

குமரி மக்களே, இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு போய் நீண்ட நேரம் வரிசைல நின்னு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீங்க இங்கு<> க்ளிக்<<>> செய்து வீட்டில் இருந்தபடியே உங்க வரிகளை செலுத்தவும் முடியம், குறையை புகார் செய்யவும் முடியும்.. மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த உடனே SHARE பண்ணுங்க

error: Content is protected !!