News September 23, 2025

குமரியில் முக்கிய ரயில் சேவை மாற்றம்

image

கட்டாக் ரயில் நிலையத்தில் புதுப்பிப்பு பணிகள் நடப்பதால் ரயில் எண் 16318 ஸ்ரீ வைஷ்ணோதேவி கத்ரா- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் செப்.22 முதல் அக்.2 வரை கத்ராவிலிருந்து புறப்படும்போது பராங்க் ஜங்ஷன், கப்லியாஸ் இடையே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்குப்பதில் ரெயில் கட்டாக் நிலையத்தை தவிர்த்து  நராஜ் மரத்தபூர் வழியாக இயங்கும். நராத் மரத்தபூரில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Similar News

News September 23, 2025

குமரி: மண்வெட்டியால் மகனை வெட்டிய தந்தை

image

உண்ணாமலைக்கடை மாரிமுத்து (83), மகன் ராஜேஷ் (39). கொத்தனாரான ராஜேஷ் அடிக்கடி மது குடித்து வந்து தந்தையிடம் தகராறில் ஈடுபடுவார். செப்.21-ம் தேதி மதுபோதையில் வீட்டுக்கு வந்த ராஜேஷ் மாரி முத்துவை தாக்க, ஆத்திரமடைந்த மாரிமுத்து மண்வெட்டியால் ராஜேஷின் கழுத்தில் வெட்டியுள்ளார். ராஜேஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மார்த்தாண்டம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

News September 23, 2025

குமரி: இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

குமரி மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News September 23, 2025

குமரி: குளத்தில் இறங்கி தேங்காய் எடுத்தவர் புதரில் சிக்கி உயிரிழப்பு

image

சித்திரங்கோடு ராஜாங்கம் (32) நேற்று குலசேகரம் தாழபிடாகையில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தபோது தேங்காய் குளத்தில் விழுந்துள்ளது. குளத்தில் இறங்கி தேங்காய்களை எடுத்து விட்டு கரைக்கு திரும்ப முயன்ற போது அவர் பாசி, புதர் செடிகளுக்கு இடையில் சிக்கி தண்ணீரில் மூழ்கியுள்ளார். தீயணைப்பு துறையினர் அங்குச் சென்று குளத்தில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்த ராஜாங்கத்தின் உடலை மீட்டனர்.

error: Content is protected !!