News March 10, 2025
குமரியில் மிககனமழை எச்சரிக்கை

குமரி மாவட்டத்தில் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படாத வண்ணம், மின்சாதனங்களை கவனமுடன் கையாளவும், மேலும் மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர்நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும், மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.* நண்பர்களை உஷார் படுத்தவும்*
Similar News
News September 11, 2025
திருவட்டாறு பெருமாள் கோயிலில் 14ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் 14ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெறுகிறது. மாலை 4 மணி அளவில் சபா மண்டபத்தில் தொட்டில் அலங்கரிக்கப்பட்டு, அதில் ஸ்ரீ கிருஷ்ணன், பலராமன் ஐம்பொன் விக்கிரகங்கள் வைக்கப்படுகிறது. பக்தர்கள் தொட்டிலை ஆட்டி மகிழலாம். தொடர்ந்து பாகவதம் வாசிக்கப்படுகிறது. நள்ளிரவு 12 மணி அளவில் கலச பூஜை, அபிஷேகம், தீபாராதனையுடன் கிருஷ்ண ஜெயந்தி விழா நிறைவடைகிறது.
News September 10, 2025
குமரி எஸ்.பி எச்சரிக்கை

தேங்காபட்டினம் மாதாபுரம் பகுதி ஜெயின் மெலார்டு (46) போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மாவட்ட எஸ்.பி அறிவுறுத்தலின்பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News September 10, 2025
ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் 2500 பேருக்கு சிகிச்சை

ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினசரி 2500 வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர் என கல்லூரி முதல்வர் லியோடேவிட் தெரிவித்துள்ளார். விடுமுறை நாட்களில் 1000-க்கும் அதிகமானோர் வருவதாக கூறிய அவர் மருத்துவமனை வரும் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். நாளுக்கு நாள் நோயாளிகள் வருகை அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.