News December 19, 2025
குமரியில் பைக்குகள் திருடிய கேரள வாலிபர் கைது

கடந்த மாதம் திருவட்டார் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பூந்தோப்பு, வேர்கிளம்பியில் 3 பைக்குகள் திருட்டு போனது. இந்நிலையில் களியக்காவிளையில் போலீசார் ரோந்து சென்றபோது கேரள மாநிலம் திருவனந்தபுரம் வள்ளக்கடவு பகுதியை சேர்ந்த சஜித்கான்(25) என்பவரை பிடித்து விசாரித்தபோது அவர் திருவட்டார் பகுதியில் 3 பைக் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து 3 பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
Similar News
News December 22, 2025
குமரி: மயங்கி விழுந்து மீனவர் உயிரிழப்பு!

மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் பெல் லார்மின். மீன்பிடி தொழில் செய்து வருகிறார். திருமணம் ஆகாத நிலையில் தம்பி ஸ்டாலின் ஜோஸ் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கேரளாவில் தொழிலுக்கு சென்றுவிட்டு கடந்த 18-ம் தேதி வீட்டிற்கு சென்ற நிலையில் சமையலறையில் மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு GH-ல் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
News December 22, 2025
குமரி: மாணவி செயலால் பரபரப்பு!

நாகர்கோவில் வல்லன்குமரன்விளை பகுதி நீர்த்தேக்க தொட்டியின் மீது நேற்று முன் தினம் மாணவி ஒருவர் ஏறி நின்றுள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் மாணவியை கீழே இறங்குமாறு கூறினர். ஆனால் மாணவி இறங்காததால் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து கீழே இறங்கிய மாணவியிடம் விசாரணை செய்ததில் வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக தொட்டியின் மேல் ஏறி நின்றதாக தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
News December 22, 2025
குமரி: டிகிரி போதும்., BOI வங்கியில் ரூ.1,20,940 சம்பளத்தில் வேலை!

குமரி மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன 5க்குள் <


