News September 8, 2025

குமரியில் பிற்பகலுக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு

image

குமரி மாவட்டத்தில் இன்று பிற்பகலுக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் அசம்பு, மாறாமலை, காணிப் பெட்டி, மகேந்திரகிரி மலை பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்குத் கடற்கரை உட்பட மாவட்டத்தின் சமவெளி பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும் என தெரிவித்துள்ளது.

Similar News

News September 9, 2025

கண்ணாடி பாலத்தில் கண்ணாடியில் விரிசல் எப்படி?

image

கன்னியாகுமரி கடலில் உள்ள கண்ணாடி கூண்டு பாலத்தில் நடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடியில் ஒன்றில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சீரமைப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சுத்தியல் ஒன்று கண்ணாடியில் விழுந்ததில் கண்ணாடி சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஒரு சுத்தியல் விழுந்து உடையும் அளவில் கண்ணாடி அமைக்கப்பட்டு உள்ளதா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

News September 8, 2025

குமரி ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட 265 மனுக்கள்

image

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கள்கிழமை ஒட்டி மனுநீதி நாளில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவிடம் மனுக்களை கொடுத்தனர். இலவச வீட்டு மனை பட்டா கேட்டும், பட்டா பெயர் மாற்றம் குடிநீர் வசதி சாலை வசதி உள்ளிட்ட 265 மனுக்கள் ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது. மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டார்.

News September 8, 2025

குமரி: 35 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை

image

குமரி மாவட்ட இளைஞர்களே வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணிக்கு 468 காலி பனியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு. சம்பளம்: 35,000/-. விண்ணபிக்க கடைசி தேதி : 21-09-2025. மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க.

error: Content is protected !!