News January 24, 2025
குமரியில் பிப்ரவரி 28-ல் மூடப்படும் அணைகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1,2 மாம்பழத்துறை ஆறு அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தை முன்னிட்டு பிப்.,28ஆம் தேதி அணைகள் மூடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கம்போல் பிப்ரவரி 28ஆம் தேதி அணைகள் மூடப்படும் என அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 15, 2025
குமரி: மாமியாரை தாக்கிய Ex. ராணுவ வீரர்

மாத்தார் தத்தன் விளையை சேர்ந்தவர் தங்கலெட் (64). இவரது மகளின் கணவர் கொல்வேலைச் சேர்ந்த Ex. ராணுவ வீரர் கிளீட்டஸ் (43). மகளுக்கும் கிளீட்டசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மகள் வெளியூரில் உள்ளார். 2 நாட்கள் முன்பு கிளீட்டஸ் மாத்தாரில் தங்கலெட்டை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். காயமடைந்த தங்கலெட் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி. நேற்று திருவட்டார் போலீசார் கிளீட்டசை கைது செய்தனர்.
News November 15, 2025
குமரி:இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

குமரி மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <
News November 15, 2025
குமரி: விஷம் குடித்து முதியவர் தற்கொலை

புத்தேரி நான்கு வழிசாலையில் நேற்று (நவ.14) ஒருவர் பேச்சு மூச்சின்றி கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி வடசேரி போலீசார் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிந்தது. போலீசின் விசாரணையில், அவர் மேல்புறம் ஆர்.சி. தெருவைச் சேர்ந்த தொழிலாளி கிஷோர்(53) என தெரியவந்தது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


