News October 24, 2025
குமரியில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

கன்னியாகுமரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (அக். 25) நடைபெற உள்ளது. ஆகையால் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, சுசீந்திரம், கீழமனக்குடி, சின்ன முட்டம், சுவாமிதோப்பு, அஞ்சுகிராமம், தேரூர், மருங்கூர், புதுக்கிராமம், அகஸ்தீஸ்வரம், கொட்டாரம் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். SHARE!
Similar News
News October 24, 2025
குமரியில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள குட்கா சிக்கியது எப்படி?

நாகர்கோவில் ஆயுதப்படை சாலையில் அருள்ஜீவன் என்பவரது பெட்டிக்கடையில் போலீசார் நடத்திய சோதனையில் 50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் கேரளாவில் இருந்து குட்கா கொண்டுவந்து விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. அதன் பேரில் எஸ்.ஐ. ஜெஸி மேனகா கேரளா சென்று குடோனில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள குட்கா, 2 கார்கள், 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
News October 24, 2025
குமரி – ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து மாற்றம்

தெற்கு ரயில்வே செய்திகுறிப்பு: மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் ரயில் எண் 12666 கன்னியாகுமரி ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரியிலிருந்து அக்25ம் தேதி காலை 5.50 மணிக்கு புறப்படுவது விருதுநகர், மானா மதுரை, காரைக்குடி திருச்சி Jn. வழியாக செல்லும். மேலும் மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் ஜங்ஷன் செல்லாது. கூடுதலாக சிவகங்கை, புதுக்கோட்டையில் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது
News October 24, 2025
குமரி மாவட்ட விவசாயிகள் வேதனை

குமரி மாவட்டத்தில் முதல்போக நெல் சாகுபடியான கன்னிப்பூ சாகுபடி கடந்த மே மாதம் தொடங்கியது. இதில் 5,600 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. இதுவரை 5000 எக்டேரில் நெல் அறுவடைப்பணிகள் நிறைவடைந்துள்ளது. 600 எக்டேரில் அறுவடைப் பணிகள் நடைபெற வேண்டி உள்ளது. அதற்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் 400-க்கும் மேற்பட்ட ஏக்கரிலான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது என அதிகாரிகள் கூறினர்.


