News December 22, 2025

குமரியில் தேமுதிக ஆலோசனை கூட்டம்

image

குமரி கிழக்கு மாவட்டம் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குமரி வருகை, விஜயகாந்த் நினைவு தினம் மற்றும் கடலூர் மாநாடு செல்வது குறித்து குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அமுதன் தலைமையில் நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

Similar News

News December 25, 2025

கன்னியாகுமரியில் மட்டும் 23,043 பேர் பாதிப்பு

image

தமிழகத்தில் இந்தாண்டு 5.05 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சுமார் 21,454 பேர் நாய்கடிக்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள், அதனை அலட்சியப்படுத்தாமல், கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

News December 25, 2025

குமரியில் ரயில் தண்டவாளத்தில் கிடந்த சடலம்!

image

குழித்துறை ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் நேற்று சுமார் 45 வயது நபர் ஒருவர் இறந்து கிடந்தார். நாகர்கோவில் ரயில்வே போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்து இறந்தவர் யார்? என விசாரித்து வருகின்றனர். மேலும், இறந்தவர் கையில் தேர்தலுக்கு வாக்களித்த மை காணப்பட்டதால் கேரளாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தவராக இருக்கலாம் என போலீசார் கூறினர்.

error: Content is protected !!