News October 17, 2025

குமரியில் தீபாவளியன்று கனமழைக்கு வாய்ப்பு

image

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக குமரியில் அக். 20ம் தேதி தீபாவளியன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 19, 2025

ஊராட்சி இணைப்பு குறித்து கருத்து தெரிவிக்கலாம் – ஆட்சியர்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் குறைந்த பரப்பளவு மற்றும் மக்கள் தொகை கொண்டுள்ள பாலமோர் ஊராட்சியை சுருளகோடு ஊராட்சியுடன் இணைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி, மறுசீரமைப்பு தொடர்பாக கருத்துக்கள் இருப்பின் டிச.27ம் தேதிக்குள் கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் கருத்து தெரிவிக்கலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று (டிச.19) தகவல் தெரிவித்துள்ளார்.

News December 19, 2025

குமரி: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிப்பது இனி சுலபம்

image

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது?. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால் <>SANCHAR SAATHI<<>> என்ற செயலியில் சென்று உங்களது செல்போன் நம்பர், IMEI நம்பர் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். அதன் பின் உங்களது தொலைந்த போன் BLOCK செய்யப்பட்டு, கண்டுபிடிக்கப்படும். SHARE IT.

News December 19, 2025

திருவட்டாறில் E.P.F குறைதீர் கூட்டம்

image

நாகர்கோவில் வருங்கால வைப்புநிதி நிறுவனம் & தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் இணைந்து நடத்தும் “வைப்புநிதி உங்கள் அருகில் – குறைதீர்ப்பு முகாம்”  வரும் டிச.29ம் தேதி திருவட்டாறு எக்செல் பள்ளியில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இதில் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்கள், தொழில் நிறுவனங்கள் பங்கேற்று பயனடையலாம் என  நாகர்கோவில் வருங்கால வைப்பு நிதி ஆணையர் சுப்பிரமணி தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!