News March 26, 2025

குமரியில் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி!

image

குமரி மாவட்டத்தில் வீடுகள், தொழிற்சாலைகளில் சூரிய ஒளி மூலம் 3.25 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக 679 இடங்களில் சூரிய ஒளி மின் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. நீர்மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்றவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படும் நிலையில் குமரியில் தற்போது சூரிய ஒளி மூலமும் மின் உற்பத்தி செயல்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News April 9, 2025

தோவாளை : இன்றைய மலர்கள் விலை விபரம்

image

குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் இன்றைய (ஏப்.09) விலை நிலவரம். 1 கிலோ பிச்சி ரூ.1100, மல்லி ரூ.600, சம்பங்கி ரூ.250, அரளி ரூ.320, வாடாமல்லி ரூ.60, கிரேந்தி ரூ.70, கோழிக்கொண்டை ரூ.60, துளசி ரூ.30, பன்னீர் ரோஜா ரூ.150, மஞ்சள் செவ்வந்தி ரூ.240, வெள்ளை செவ்வந்தி ரூ.340, மரிக்கொழுந்து ரூ.70, தெத்தி ரூ.100 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

News April 9, 2025

குமரி : 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 25க்கும் மேற்பட்ட இயந்திர ஆபரேட்டர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 12 ஆம் வகுப்பு படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <>இங்கு கிளிக்<<>> செய்து 22-05-2025க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News April 9, 2025

குளச்சல்: ரூ.25 ஆயிரத்துடன் மனைவி மாயம்

image

குளச்சல் அருகே சாஸ்தான்கரை பகுதியில் வசித்து வருபவர் அபினேஷ் (34). இவர் பள்ளிமுக்கு சந்திப்பில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (25). இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவர் பிள்ளைகளுடன் வசித்து வந்த மகாலட்சுமி கடந்த மாதம் 25ஆம் தேதி திடீரென மாயமானார்.ரூ.25,000ஐ அவர் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!