News July 11, 2025
குமரியில் சிவில் சப்ளை அலுவலகத்தில் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணத்தில் அமைந்துள்ள சிவில் சப்ளை அலுவலகத்தில் இன்று (ஜூலை.10) தமிழ்நாடு உணவு வழங்கும் துறை ஆணையத்தின் தலைவர் சுரேஷ் ராஜன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள அவருடன் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
Similar News
News July 11, 2025
குமரியில் விஷ ஜந்து கடித்து கொத்தனார் உயிரிழப்பு

திருவட்டார் அருகே தச்சக்குடி விளையை சேர்ந்த கொத்தனார் சதீஷ்(37). திருமணமாகாத இவருக்கு அதிக குடிப்பழக்கம் இருந்துள்ளது. கடந்த ஜூலை.07 தேதியன்று அருகில் உள்ள வயலில் மயங்கிய நிலையில்
கிடந்தவரை ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சதீஷ் உயிரிழந்தார். இதுக்குறித்து திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
News July 11, 2025
கன்னியாகுமரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் ஜூலை.26 அன்று மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 113 நிறுவனங்கள் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இங்கே <
News July 10, 2025
குமரி விவசாயிகளே: 70% மானியத்தில் சோலார் பம்புசெட்

தமிழக அரசு, விவசாயிகளின் நலன் கருதி 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. இந்த மானியத்தில் 40% மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகின்றன. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க உழவன் செயலி (Ulavan App) வழியாக தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.மேலும் விரிவான தகவல்களைப் பெற, குமரி மாவட்டத்திலுள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம். அனைவருக்கும் SHARE செய்யுங்க.