News September 30, 2024
குமரியில் சிறுவர்கள் ஓட்டி வந்த 15 பைக்குகள் பறிமுதல்

கன்னியாகுமரி போக்குவரத்து ஆய்வாளர் பிரபு, போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் கன்னியாகுமரி பகுதியில் 18 வயது குறைவான சிறுவர்கள் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காகவும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஒட்டி வந்ததாகவும் 15 இருசக்கர வாகனங்களை இன்று (செப்.29) பறிமுதல் செய்து அபராதம் விதித்தனார். அதிக ஒலி எழுப்பும் சைலன்ஸர்களை போலீசார் வாகனத்தில் இருந்து அகற்றினர்.
Similar News
News August 18, 2025
நாகர்கோவில் வழியாக சிறப்பு ரயில்..!

திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு இம்மாதம் 27 மற்றும் செப்டம்பர் 3 தேதிகளில் சிறப்பு ரயில் நாகர்கோவில் வழியாக இயக்கப்படுகிறது. இதே போல் வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இம்மாதம் 28, செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் நாகர்கோவில் வழியாக இயக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை ரயில்வே இன்று வெளியிட்டுள்ளது.
News August 18, 2025
ஆதிதிராவிட பழங்குடியின இளைஞர்களுக்கு வீடியோ பயிற்சி

குமரி ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பு: தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு (Certification in videography and video Editing) பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரில் விண்ணப்பிக்கலாம்.
News August 18, 2025
குமரியில் ஆக.20 உள்ளூர் விடுமுறை!

ஸ்ரீநாராயண குரு பிறந்த தினத்தை முன்னிட்டு 20.08.2025 (புதன் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகஸ்தீஸ்வரம். விளவங்கோடு மற்றும் திருவட்டார் ஆகிய மூன்று வட்டங்களில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.