News October 22, 2025
குமரியில் கோடிகளை தாண்டி மது விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 18, 19 மற்றும் 20 ஆகிய 3 நாட்கள் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதனால் மதுக்கடைகளில் மதுபானங்கள் விற்பனை அதிகமாக இருந்தது.18-ந் தேதி ரூ.4 கோடியே 21 லட்சத்து 92 ஆயிரத்து 910-க்கும், 19-ந் தேதி ரூ.5 கோடியே 50 லட்சத்து 59 ஆயிரத்து 90-க்கும் விற்பனை ஆனது. தீபாவளி அன்று ரூ.4 கோடியே 44 லட்சத்து 24 ஆயிரத்து 760-க்கு மதுபானங்கள் விற்பனையானது.
Similar News
News February 19, 2026
குமரி: தவறாக அனுப்பிய பணத்தை திரும்ப பெற இதை பண்ணுங்க!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News February 19, 2026
BREAKING கன்னியாகுமரிக்கு மஞ்சள் அலர்ட்

தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், ஏற்கனவே தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள்(பிப்.21) குமரி மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்களது திட்டங்களை வகுத்துக் கொள்வது நல்லது. SHARE IT
News February 19, 2026
குமரி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

குமரி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <


