News September 9, 2025

குமரியில் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு!

image

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று வேகமாக வீசி வருகிறது. இதன் காரணமாக குமாரபுரம், ஆரல்வாய்மொழி, காவல்கிணறு, செண்பகராமன் புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காற்றாலைகளில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. 230 கிலோ வாட் மின் உற்பத்தி செய்யும் காற்றாலைகளில் 220 மெகாவாட் வரை மின் உற்பத்தி நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News September 9, 2025

சட்டமன்ற உறுதி குழு 11ஆம் தேதி குமரி வருகை

image

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுவினர் (2024-2026) அதன் தலைவர் .வேல்முருகன் தலைமையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 11.09.2025 (வியாழக்கிழமை) அன்று வருகை தரவுள்ளார்கள். அன்று பிற்பகல் 2 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் குழுவினர் ஆலோசனை நடத்துகிறார்கள் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.

News September 9, 2025

BREAKING குமரிக்கு வருகை தரும் விஜய்

image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்.13 முதல் டிச.20 வரை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார். அதன்படி செப்.13 அன்று திருச்சியில் தொடங்கி அக்.10 அன்று நெல்லை, குமரி, திருநெல்வேலியில் மக்களை சந்திக்க உள்ளார். இதற்காக பாதுகாப்பு கோரி காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

News September 9, 2025

குமரியில் 14 சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 சப்-இன்ஸ்பெக்டர்களை வெவ்வேறு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டார். அதில் பளுகல், களியக்காவிளை, இரணியல், மணவாளக்குறிச்சி, ஆரல்வாய்மொழி, ராஜாக்கமங்கலம், வெள்ளிச்சந்தை, கீரிப்பாறை, புதுக்கடை, கோட்டார், தெந்தாமரைக்குளம், கருங்கல் உட்பட 14 போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றிய 14 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!