News November 9, 2024

குமரியில் கடந்த மாதம் 10 கடைகளுக்கு சீல்

image

குமரி மாவட்டத்தில் குட்கா விற்பனையை கட்டுப்படுத்த உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 10 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் தட்டான்விளை, கீழ புத்தேரி பகுதிகளில் மூன்று கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

Similar News

News August 8, 2025

குமரி: படகு சேவைக்கு ஆன்லைன் மூலம் பயண சீட்டு!

image

குமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இணைய வழி படகுபயணசீட்டு வசதி தொடக்க விழா இன்று(ஆக.8) நடந்தது. இதில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொண்டு இணைய வழி சேவையை தொடங்கி வைத்தார். இதில் கலெக்டர் அழகு மீனா, உணவு ஆணையத்தலைவர் சுரேஷ்ராஜன், மேயர் மகேஷ், பொது மேலாளர் தியாகராஜன், மேலாளர் முருக பூபதி, நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உட்பட திமுக பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

News August 8, 2025

சுதந்திர தின விழா – குமரியில் 95 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

image

சுதந்திர தின விழாவை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராம மக்கள் பங்கேற்கும் வகையில் இடம் மற்றும் நேரத்தை கிராம ஊராட்சி முன்கூட்டியே தெரிவித்து ஊராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கை விவரங்களை கூட்டத்தில் படித்துக் காட்டி ஒப்புதல் பெற வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!