News September 24, 2025
குமரியில் ஓய்வுபெற்ற ஆசிரியையையிடம் ரூ. 4.20 லட்சம் மோசடி

தக்கலை அருகே உள்ள கோழிப்போர்விளையை சேர்ந்தவர் மேரிலீலா (65), ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர் ஒரு சொத்தை விலைக்கு வாங்கினார். அப்போது இடைதரகராக செயல்பட்ட விஜயகுமார் என்பவர் சொத்தின் விலையை விடஅதிகமாகரூ.4.20 லட்சம் வாங்கி மோசடி செய்துள்ளார். இதனை அறிந்த மேரிலீலா அந்த பணத்தை விஜயகுமாரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை கொடுக்கவில்லை. இது பற்றி தக்கலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்
Similar News
News September 24, 2025
குமரி: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

குமரி மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News September 24, 2025
குமரி: பள்ளி மாணவர் மயங்கி விழுந்து பலி

தக்கலை சரல்விளையில் வசிக்கும் ஷேக் முகமதுவின் மகன் பயாஸ் அகமது(16). தக்கலை அரசு பள்ளியில் 11.ம் வகுப்பு படிக்கும் இவர் நேற்று (செப்.23) நண்பர்களுடன் வள்ளியாற்றில் குளிக்கச்சென்றார். குளித்த பின்னர் பயாஸ் அகமது ஆற்றங்கரையில் மயங்கி விழுந்தார். உடனே அவரை தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாகக்கூறினர். கொற்றிக்கோடு போலீசார் விசாரணை நடத்தினர்.
News September 24, 2025
நெல் கொள் முதல் நிலையங்களில் தொலைபேசி எண்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்வதற்கு விவசாயிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதற்கான வசதியை செய்து கொடுத்துள்ளது. இந்நிலையில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல் விற்பனை செய்ய தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. இந்த எண்களில் தொடர்பு கொண்டு நெல் விவசாயிகள் விற்பனை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.