News February 13, 2026

குமரியில் ஒரே நாளில் 1,303 வழக்குகள் பதிவு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1,303 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட வழக்குகள் 780 பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.

Similar News

News February 15, 2026

குமரி: காண்டிராக்டர் கொலையில் குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்

image

பணிக்கன்குடியிருப்பை சேர்ந்த ஜெயகுமாருக்கும், விக்டர் ராஜதாசுக்கு பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சனையில் ஜெயகுமார் (ம) அவரது சகோதரர் விஜயகுமார் மீது பிப்.12 அன்று விக்டர் ராஜதாஸ் காரை ஏற்றினார். இதில் விஜயகுமார் உயிரிழந்தார். கோட்டார் போலீசார் வழக்குப்பதிந்து ராஜதாசுவை கைது செய்தனர். மேலும், விசாரணையில் பணத்தைக் கேட்டு அவமானப்படுத்தியதால் காரை ஏற்றியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

News February 15, 2026

குமரி: வாகன விபத்தில் ராணுவ வீரர் பலி

image

தக்கலை சேர்ந்த குமாரதாஸ் ஹரியானா ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார். இவர் பிப்.11அன்று ராஜஸ்தான் பயிற்சி முகாமிற்கு செல்லும்போது வாகன விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடல் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் ராணுவ மரியாதை செய்யப்படாது என அதிகாரிகள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபின் குடும்பத்தினர் முன்னிலையில் அவருக்கு இறுதி சடங்கு நடந்தது.

News February 14, 2026

குமரி: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION-ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!