News December 28, 2025
குமரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

சுசீந்திரம் அருகே கொத்தன்குளத்தை சேர்ந்தவர் வெர்ஸ்லின் ஹரணி (23). இவர் நர்சிங் படித்துள்ளார். இவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டு வந்தது. இந்த காரணத்தால் நேற்று (டிச.27) வெர்ஸ்லின் ஹரணி வீட்டு படுக்கை அறையில் சேலையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சுசீந்திரம் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 1, 2026
குமரி அருகே இளைஞர் அடித்துக் கொலை

கன்னியாகுமரி அருகே சுண்டன் பரம்பு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (34). இவர் செப்டிக் டேங்க் கிளீனிங் செய்யும் தொழில் செய்து வந்தார். நேற்று இவர் வீட்டில் இருந்து வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. லீபுரம் கடற்கரையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். அவரது உடலை கன்னியாகுமரி போலீசார் கைப்பற்றி, அடித்து கொலை செய்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
News January 1, 2026
குமரி: பாலத்தில் இருந்து தவறி விழுந்த கவுன்சிலர் பலி

மாங்காவிளையை சேர்ந்த ஸ்டாலின் (50) உண்ணாமலை கடை பேரூராட்சி 7ம் வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்து வந்தார். இவர் டிச.17ம் தேதி இரவு வீட்டு அருகில் உள்ள பாலத்தில் அமர்ந்திருந்த போது எதிர்பாராதவிதமாக 15 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். படுகாயமடைந்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று (டிச.31) உயிரிழந்தார். மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
News January 1, 2026
குமரி மக்களே., இனி பத்திரப்பதிவு சுலபம்!

குமரி மக்களே; உங்களது பதிவுத்துறை தொடர்பான தேவைகளுக்கு இங்கு <


