News April 1, 2025
குமரியில் இந்த ஆண்டு விபத்துக்கள் குறைவு: எஸ்பி தகவல்

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் இன்று (ஏப்.01) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 106 உயிரிழப்பு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு இது வரையிலும் 49 உயிரிழப்பு விபத்துகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது பாதிக்கு மேல் குறைவாகும் என்று கூறியுள்ளார்.
Similar News
News September 19, 2025
குமரி: நாளை ரயில் சேவையில் முக்கிய மாற்றம்

கோட்டயம்- சிங்கவனம் இடையே பாலம் பராமரிப்பு பணியையொட்டி நாளை (செப் 19) ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ரெயில் எண் 12624 திருவனந்தபுரம்-சென்னை சென்டிரல் அதிவேக ரெயில் ஆலப்புழை வழியாக இயக்கம்; ரெயில் எண் 22503, ரெயில் எண் 16343, ரெயில் எண் 16347 ஆலப்புழை வழியாக இயக்கம்; ரெயில் எண் 16366) நாகர்கோவில் – கோட்டயம் ரெயில் சங்கனாச்சேரி வரை இயக்கக்கபடுகிறது.
News September 19, 2025
குமரி: மக்களே இந்த அதிசய காட்சியை காணத்தவறாதீர்கள்

திருவட்டாறில் 108 வைணவத்தலங்களில் ஒன்றான ஆதிகேசவப்பெருமாள் ஆலயம் உள்ளது. பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் 3, 4, 5 தேதிகளில் சூரியன் மேற்குப்பகுதியில் மறையும் போது சூரியனின் செங்கதிர்கள் கோவில் கருவறையில் பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் ஆதிகேசவப்பெருமாளின் திருமேனியில் விழும் வகையில் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த அதிசய ஒளியை செப்.19, 20, 21 தேதி மாலையில் தரிசிக்கலாம்.
News September 19, 2025
குமரி: EXAM இல்லாத அரசு துறை வேலை! APPLY

மத்திய அரசின் கீழ் செயல்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 160 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. B.E படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இது 4 வருட ஒப்பந்த வேலையாகும். மாத சம்பளம் – ரூ.25,000 முதல் ரூ.31,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு தேர்வு கிடையாது. அக். 22க்குள் <