News April 1, 2024

குமரியில் ஆலோசனை கூட்டம்

image

கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக பசிலியான் நசரேத் போட்டியிடுகிறார். இவரின் வெற்றிக்காக குமரி மாவட்ட அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் அதிமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் மாநகர வடக்கு மண்டல செயலாளர் மாநகராட்சி உறுப்பினர் ஸ்ரீலிஜா தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News

News April 4, 2025

நுண்ணீர் பாசனம் அமைக்க 100 சதவீதம் மானியம்

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது.
குமரி மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை 973 பயனாளிகள் வயல்களில் 788 பரப்பளவில் ₹ 4.4 கோடியில் நுண்ணீர் பாசனம் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் சிறு விவசாயிகள் 100% மானியத்துடன் இணையலாம். அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகி அணுகி பயன்பெறலாம்.

News April 4, 2025

குமரியில் 3 நாள் போக்குவரத்து மாற்றம்

image

நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலையில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு சொந்தமான உயர் அழுத்த புதைவடம் பழுதை சரி செய்யும் பணி நடைபெற இருப்பதால் நாளை(ஏப்ரல்.5 முதல் 7ஆம்)தேதி வரையிலும் பார்வதிபுரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் வழியாக மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது என நாகர்கோவில் மின் விநியோக செயற்பொறியாளர் கூறியுள்ளார்.ஷேர் செய்யவும்.

News April 4, 2025

குமரியில் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் உற்பத்தி நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட இயந்திர ஆப்ரேட்டர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <>இங்கு <<>>கிளிக் செய்து 25-04-2025க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!