News August 27, 2025
குமரியில் ஆக.30,31-ல் TASMACக்கு பூட்டு..!

குமரி மாவட்டத்தில் நாளை(ஆக.27) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் 1000க்கும் அதிகமான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெறவுள்ளது. இதைதொடர்ந்து ஆக.30 மற்றும் 31ம் தேதிகளில் விநாயகர் சிலைகள் கரைப்பு தினத்தன்று, சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக மாவட்டத்தில் 11 இடங்களில் மதுக்கடைகளை மூடுவதற்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Similar News
News August 27, 2025
பாபநாச கால்வாய் ஆக்கிரமிப்பு அளவீடு செய்யும் பணி

கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரும் பாபநாச கால்வாய் ஆக்கிரமிப்பை சரி செய்ய நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் பெயரில் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்யும் பணிகள் இன்று (ஆக. 26) நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் கவுன்சிலர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News August 26, 2025
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து அலுவலர்கள் பட்டியல் வெளியீடு

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை இன்று (26.08.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் SSI மற்றும் HC அலுவலர்களின் பெயர், கைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாகர்கோவில், மார்த்தாண்டம், குலசேகரம், கன்னியாகுமரி பகுதிகளில் தனித்தனியாக ரோந்து மேற்கொள்ளப்படவுள்ளது. அவசர சூழ்நிலையில் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை 04652-220417 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
News August 26, 2025
குமரியில் ஆம்னி பேருந்தில் அதிக கட்டணமா…?

நாளை விநாயகர் சதுர்த்தியை கொண்டாட குமரி மக்களே உங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வெளியூரில் இருந்து புறபட்டு இருப்பீர்கள்! சொந்த ஊர்க்கு புறபட்ட உங்களுக்கு ஆம்னி பேருந்தின் கட்டண உயர்வு அதர்ச்சியை கொடுக்கிறதா? ஆம்னி பேருந்தின் கட்டணம் அதிகம் வசூலித்தால் 9043379664 எண்ணில் ஆதாரத்துடன் புகாரளியுங்க… (குறிப்பு: நீங்கள் சொந்த ஊரில் இருந்து வெளியூர் திரும்பும் போது இந்த எண் பயன்படும்) SHARE பண்ணுங்க!