News August 10, 2024

குமரியில் ஆக.,15ல் கிராம சபை – ஆட்சியர் அறிவிப்பு

image

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று காலை 11 மணி அளவில் குமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று (ஆக.10) தெரிவித்துள்ளார். ஊராட்சி வளர்ச்சித் திட்டம், வறுமை ஒழிப்புத் திட்டம், அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News November 4, 2025

நாகர்கோவில்: தனியார் குடோனில் தீவிபத்து

image

அஞ்சுகிராமம் அருகே ராமனாதிச்சன் புதூரில் தனியார் குடோன் உள்ளது. இங்கு மருந்துக்கழிவுகள், துணி கழிவுகள் மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (நவ.3) காலை குடோனில் உள்ள பொருட்கள் தீ பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்த நிலையில் நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்து குறித்து அஞ்சுகிராமம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 3, 2025

கடலோர ஊர் காவல் படைக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோர ஊர் காவல் படைக்கு ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நேர்காணல் நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R.ஸ்டாலின் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். 45 தினங்கள் மாவட்ட ஆயுதப் படையில் வைத்து பயிற்சிகள் வழங்கப்படும் பின்பு அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் பணி அமர்த்தப்படுவார்கள். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 3, 2025

குமரி: இனி Gpay, Phonepe, paytm -க்கு குட்பை!

image

குமரி மக்களே; Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி தெரியனுமா? இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 போனில் அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்புவது, நெட் பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியப்படுத்த SHARE பண்ணுங்க.

error: Content is protected !!