News February 26, 2025

குமரியின் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம்!

image

12 சிவாலயங்களை ஓட்டமாக ஓடி தரிசிக்கும் சிவாலய ஓட்டம் குமரியில் புகழ்பெற்றது. 12 கோயில்களில் உள்ள சிவனை உரிய நேரத்தில் தரிசிக்கவே இந்த ஓட்டம். ‘ஹரியும் ஹரனும்’ ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்த கிருஷ்ணர் நடத்திய திருவிளையாடலே சிவலாய ஓட்டம் வரக் காரணமானது. சிவராத்திரிக்கு முதல் நாள் மாலை முன்சிறையில் தொடங்கும் ஓட்டம் ‘கோவிந்தா கோபாலா’ கோஷத்துடன் 110 கி.மீ. கடந்து சுசீந்திரத்தில் நிறைவடைகிறது.

Similar News

News March 8, 2026

குமரி: ஆயுத போலீஸ் படை தேர்வு அறிவிப்பு

image

மத்திய ஆயுத போலீஸ் படையில் காலியாக உள்ள 349 காலிபணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அதன்படி பட்டப்படிப்பு முடித்த 20 -25 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு சென்னை, மதுரையில் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> மார்ச்.12 வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT

News March 8, 2026

குமரி: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை SHARE பண்ணுங்க..

News March 8, 2026

குமரி: 24 துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இடமாற்றம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம் உட்பட ஒன்பது ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணியாற்றும் துணை வட்டார வளர்ச்சி நிலையான அதிகாரிகளை நிர்வாக நலன் கருதி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று பணியிட மாற்றம் செய்து உள்ளார். மொத்தம் 24 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!