News February 23, 2026

குமரிக்கு வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை, நாளை (பிப்.24, 25) முடிவுற்ற (ம) புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக குமரி வருகிறார். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடியில் இருந்து குமரி வரும் முதல்வர் அன்று மாலை திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நினைவு அலங்கார வளைவு, கல்லடிவிளையில் முதல்வர் படைப்பகம், முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை (ம) தியாகி பொன்னப்பநாடார் சிலை ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.

Similar News

News February 23, 2026

வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் ஆட்சியர் அறிவிப்பு

image

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் இன்று 23.02.2026 தொடங்குகிறது. இந்த முகாம் 28.02.2026 தேதி வரை அனைத்து அங்கன்வாடி மையங்களிலும், துணை சுகாதார நிலையங்களிலும் வைத்து நடைபெறும். 6 மாதம் முதல் 11 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு நடைபெறுகிறது என்று குமரி ஆட்சியர் அழகு மீனா தெரித்துள்ளார்.

News February 23, 2026

குமரி: உங்களுக்கு ஓட்டு இருக்கா? தெரிஞ்சுக்க APP..!

image

குமரி மக்களே, SIR இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா? <>இங்கு க்ளிக்<<>> செய்து ECINET செயலியை பதிவிறக்கம் செய்து உங்க வாக்களர் எண்ணை பதிவு செய்தால் எந்த பாகம், உண்க்களது வாக்கு சாவடி உள்ளிட்ட அனைத்து தகவலும் வந்துடும். உங்க குடும்ப உறுப்பினர் வாக்கு விவரங்களையும் பார்க்களாம். இந்த பயனுள்ள தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 23, 2026

குமரியில் 2500 போலீஸ் பாதுகாப்பு – எஸ்.பி தகவல்

image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளையும் நாளை மறுதினமும் குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதனை ஒட்டி குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது முதலமைச்சர் வருவதை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக அவர் கூறினார்.

error: Content is protected !!