News April 25, 2024

குன்றத்தூர்: 2 காவலர்கள் பணியிடைநீக்கம்

image

குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் பகுதியில் மதுவிற்ற பெருமாள்(24) என்பவரை பிடித்த போலீசார், ரூ.26 ஆயிரம் மற்றும் 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் மணிமங்கலம் தலைமை காவலர் சங்கர், 2ம் நிலை காவலர்கள் ஆனந்தராஜ், கணேசன்சிங் ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

Similar News

News October 19, 2025

காஞ்சி: இலவச GAS சிலிண்டர் கிடைக்க இதை பண்ணுங்க!

image

காஞ்சிபுரம் மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி.பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கபடும். SHARE பண்ணுங்க

News October 19, 2025

காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு புதிய அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மின் பகிர்மான மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் மின்சார விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக செயல்பட வேண்டிய எட்டு அறிவுரைகளை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மேலும் மின்சாரம் குறித்து 24 மணி நேரமும் புகார் அளிக்கும் வகையில் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 19, 2025

காஞ்சிபுரம்: பைக் திருடிய 3 பேர் கைது

image

உத்திரமேரூரில் பைக்குகளைத் திருடிய 3 வாலிபர்களை சாலவாக்கம் போலீசார் கைது செய்தனர். நேற்று ரோந்து பணியின் போது எம்.மாம்பாக்கத்தில் சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட குருமஞ்சேரி சந்தோஷ் (22) என்பவரிடம் விசாரித்ததில், அவர் உத்திரமேரூர், வாலாஜாபாத், அரும்புலியூர் ஆகிய இடங்களில் 2நண்பர்களான மதன் (20), பிரசாந்த் (22) ஆகியோருடன் சேர்ந்து 3 பைக்குகளைத் திருடியது தெரியவந்தது.இதையடுத்து, 3பேரையும் கைது செய்தனர்.

error: Content is protected !!