News March 27, 2024

குன்றத்தூர் அருகே நிவாரண பொருட்கள் வழங்கல்

image

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவரது குடிசை வீடு நேற்று திடீரென தீப்பற்றி வீடு எரிந்து சாம்பலானது. இதையடுத்து இன்று மணிமங்கலம் காவல் ஆய்வாளர் அசோகன் பாதிப்படைந்த செல்வி வீட்டிற்கு நேரில் சென்று நிவாரண உதவியாக மளிகை பொருட்கள், ஆடைகள், சமையல் பாத்திரங்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.

Similar News

News February 17, 2026

காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவிட்டார்!

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக, மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கினார். அதில், கருணை அடிப்படையில் சிவமதி என்பவருக்கு சமையல் உதவியாளர் மற்றும் பா.ஜெயந்தி என்பவருக்கு சத்துணவு சமையலுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம்: முதலமைச்சர் குறித்து அவதூறு வீடியோ!

image

தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகையில் மூன்று மாதங்களுக்கு முன் கூட்டியே, சிறப்புத் தொகையுடன் ரூ.5,000 அனைவரின் வங்கிக் கணக்கில் கிரெடிட் ஆனது. இந்நிலையில், குன்றத்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவில்லை எனக் கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசி வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டார். அப்பெண் குறித்து திமுக நிர்வாகிகள் போலீஸ் புகார் அளித்துள்ளனர்.

error: Content is protected !!