News February 9, 2026
குன்றத்தூர் அருகே துணிகரத் திருட்டு!

காஞ்சிபுரம்: குன்றத்தூர் அடுத்த சியாம் லியோ முத்து நகரைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(45). நேற்று முன் தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு உறவினர்களுடன் சினிமா பார்க்க சென்ற அவர், திரும்பிய போது, வீட்டின் கடவு உடைக்கப்பட்டு, ரூ.1 லட்சம் மற்றும் 30 கிராம் வெள்ளிப் பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த போலீஸ் புகாரில், திருமுடிவாக்கம் போலீசார், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News February 13, 2026
சாலை விபத்தில் பலியான இளைஞரின் கண்தானம்

காஞ்சிபுரம் மிலிட்டரி ரோடு விஸ்வநாத தாஸ் நகர் கோவிந்தராஜ் அவர்களின் மகன் செல்வராஜ் நேற்று மாலை சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அதனை தொடர்ந்து இன்று அவரது உடலானது பிரேத பரிசோதனை முடிந்து இன்றைய தினம் அவர்களது உறவினிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. மறைந்த இளைஞனின் அவர்களில் அவரது கண்ணானது தானம் செய்யப்பட்டது
News February 12, 2026
காஞ்சி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
News February 12, 2026
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (பிப்.12) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


