News January 24, 2025

குன்னூர்: வியாபாரிகள் சங்கத்துக்கு சீல் வைப்பு

image

குன்னுார் மார்க்கெட்டில், 20.74 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்த, மார்க்கெட் வியாபாரிகள் சங்க அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. கமிஷனர் இளம்பரிதி உத்தரவின் பேரில், உதவி வருவாய் அலுவலர் சரவணன், வருவாய் ஆய்வாளர் சையது இப்ராகிம் மற்றும் ஊழியர்கள், ‘சீல்’ வைத்து நோட்டீஸ் ஒட்டினர். அதிகாரிகள் கூறுகையில், ‘அதிகபட்சமாக வாடகை பாக்கி வைத்த வியாபாரிகள் சங்க அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

Similar News

News February 27, 2026

கூடலூர் அருகே விபத்து!

image

கூடலூர் – நாடுகாணி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிப்பாடி அருகே இரவு 8 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த 12 சக்கர லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கூடலூர் காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 27, 2026

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (பிப்.26) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை நீலகிரி மாவட்ட காவல்துறை பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!