News May 18, 2024
குன்னூரில் 17 செ.மீ., மழை

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோவை மாவட்டம் பில்லூர் அணை பகுதிகளில் தலா 17 செ.மீ., மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் தேனி மாவட்டம் மஞ்சளாறு பகுதிகளில் தலா 9 செ.மீ., மழையும், தென்காசி மாவட்டம் சிவகிரி மற்றும் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதிகளில் தலா 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
Similar News
News April 13, 2026
BREAKING: அமைச்சர் சேகர் பாபு வீட்டில் சோதனை

அமைச்சர் சேகர் பாபுவுக்கு சொந்தமான இடங்களில் IT அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
News April 13, 2026
₹50 கட்டினால், ₹35 லட்சம் வரை கிடைக்கும்! அடடே திட்டம்

Post Office-ன் கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தில் 19 வயது முதல் தினமும் ₹50 (மாதத்திற்கு ₹1515) கட்டினால், 80 வயதாகும் போது அதிகபட்சமாக ₹35 லட்சம் வரை கிடைக்கும். இதில், 55 வயதுக்குட்பட்டவர்கள் சேரலாம். திட்டத்தில் சேர்ந்தவர் மெச்சூரிட்டி தொகையை பெறும் முன் இறக்க நேர்ந்தால், நாமினிக்கு அந்த தொகை வழங்கப்படும். அருகில் உள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News April 13, 2026
பள்ளியில் டீச்சர் கொடூரக் கொலை.. தமிழகத்தில் அதிர்ச்சி

சேலம், ஓமலூர் அருகே காமலாபுரத்தில் அரசு பள்ளியில் வைத்தே ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஆசிரியை ஸ்ரீவித்யாவின் கணவர் பள்ளிக்கே சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் தாங்காமல் ஸ்ரீவித்யாவை கொடூரமாக கணவரே வெட்டிக் கொலை செய்துள்ளார்.


