News January 8, 2025

குன்னூரில் மீண்டும் கரடி அட்டகாசம்

image

குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடியின் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குன்னூர் அருகே உபாசி செல்லும் வழியில் உள்ள பார்லோஸ் சாலையில் அமைந்துள்ள ரத்தன்லால் என்பவருடைய வீட்டில் ஸ்டோர் ரூம் கதவை உடைத்து உணவுப் பொருட்களை கரடி எடுத்துச் சென்றுள்ளதால் அப்பகுதிவாசிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை வைத்தனர்.

Similar News

News February 4, 2026

நீலகிரி: பெரும் அச்சத்தில் பொதுமக்கள்!

image

நீலகிரி: தேவர்சோலை, பாடந்துறை வேர்க்கடவு பகுதியில், பழங்குடியின மக்கள் வளர்க்கும் கால்நடைகளை மர்ம விலங்கு தொடர்ந்து தாக்கி வருகிறது. நேற்று ஒரு ஆடு கொல்லப்பட்ட நிலையில், 2 நாட்களுக்கு முன்பு சுரேஷ் என்பவரின் ஆடும் பலியானது. வனவிலங்கின் தொடர் அட்டகாசத்தால் அச்சமடைந்துள்ள மக்கள், வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி மர்ம விலங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

News February 4, 2026

நீலகிரி: பிப்ரவரி மாதத்திற்கான பசுந்தேயிலை விலை அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் தோட்டங்களில் பறிக்கப்படும் பசுந்தேயிலையை விவசாயிகள் தனியார் மற்றும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். இதற்கான கொள்முதல் விலையை தேயிலை வாரியம் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் அறிவிப்பது வழக்கம். அந்த வகையில், நடப்பு பிப்ரவரி மாதத்திற்கு பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.18.38 ஆக நிர்ணயம் செய்து தேயிலை வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

error: Content is protected !!