News January 16, 2026
குன்னூரில் மினி பஸ்கள் ஸ்டிரைக்

குன்னூர் ஜெகதளா வழித்தடத்தில் மினி பஸ் ஓட்டுநர் பிரவீன். இவரை ஓவர் டேக் செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு கும்பல் தாக்கியது. இது தொடர்பாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மினி பஸ் டிரைவர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில், இது தொடர்பாக சுரேஷ், ராஜா, சண்முகம் மற்றும் சிவக்குமார் ஆகிய 4 பேர் மீது அருவங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின் பஸ்கள் இயக்கப்பட்டது.
Similar News
News January 23, 2026
நீலகிரியில் நாளை விடுமுறை இல்லை!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 7-ஆம் தேதி எத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியரால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நாளை (ஜனவரி 24) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் மற்றும் கல்வி நிறுவனங்களும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல அனைத்து அரசுப் பணிகளும், பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 23, 2026
உங்கள் பெயர் உள்ளதா? தெரிந்து கொள்ள QR Code வெளியீடு!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘நீலகிரி பூச்சிப்பிடிப்பான்’ (Nilgiri Flycatcher) பறவை, வாக்காளர் விழிப்புணர்வுக்கான அதிகாரப்பூர்வ சின்னமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்பறவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், வாக்காளர்கள் தங்களது பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை எளிதாக சரிபார்க்கும் வகையில் QR Code ஸ்கேன் வசதியும் வெளியிடப்பட்டுள்ளது.
News January 23, 2026
நீலகிரி: ஆண் குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு!

நீலகிரி மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT


