News April 9, 2024
குன்னூரில் இந்திய ராணுவ தலைமை தளபதி

குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு நேற்று (ஏப்.8) இந்திய நாட்டின் தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே வந்தார். அங்கு நட்பு நாடுகளின் முப்படை உயரதிகாரிகளிடம் பேசுகையில், தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ சவால்கள் உள்ளிட்ட பல்வேறு ராணுவ மேம்பாடு குறித்து விளக்கினார். இராணுவ கல்லூரி கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் வரவேற்றார்.
Similar News
News April 6, 2026
குன்னூர்: அரசு பேருந்தில் மோதி ராணுவ வீரர் படுகாயம்!

குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாமை சேர்ந்த பிரதீப் பட்டேல் (35) இருசக்கர வாகனத்தில் ஊட்டியிலிருந்து தலைகுந்தா நோக்கி சென்றார். அப்போது முன் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த அரசு பஸ்சுடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவர் படுகாயமடைந்து ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஊட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 6, 2026
கூடலூர்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!

கூடலூரில் இருந்து ஊட்டி நோக்கி சென்ற வாகனங்களை தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் சோதனை செய்தனர். நடுவட்டம் பகுதியில் அரசு பஸ்சை நிறுத்தி பயணிகளை பரிசோதித்த போது, பந்தலூர் தாலுகா உப்பட்டியை சேர்ந்த விஸ்வநாதன் ஆவணங்கள் இன்றி ரூ.53 ஆயிரம் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த தொகையை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரனிடம் ஒப்படைத்தனர்.
News April 6, 2026
நீலகிரி: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 6 தாலுகாக்களில் நேற்று (ஏப்ரல் 5) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அந்தந்த பகுதி போலீசாரின் தொடர்பு எண்களும் வழங்கப்பட்டுள்ளன.


