News April 9, 2025

குன்னூரில்அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி

image

அதிகரட்டி பகுதியை சேர்ந்த ஜோகி,கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த,தி.மு.க. வார்டு கிளை செயலாளர் ரகீம்,ஆகிய இருவரும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, அனிதா,சந்தோஷ்குமார், சதீஷ்குமார்,மஞ்சுநாதன் ஆகியோரிடம்,14 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றிருந்தனர்.வேலை கிடைக்காமல் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர்கள் கொடுத்த புகாரில் நடந்த வழக்கை விசாரித்த குன்னூர் நீதிபதி அப்துல்சலாம் இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.

Similar News

News May 8, 2025

நீலகிரி: அவசர காலத்தில் உதவும் எண்கள்!

image

▶️நீலகிரி மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077. ▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 0423-2442344. ▶️காவல் கட்டுப்பாட்டு அறை 100. ▶️ தீ தடுப்பு பாதுகாப்பு 101. ▶️குழந்தைகள் பாதுகாப்பு 1098. ▶️பெண்கள் உதவி எண் 181. ▶️பேரிடர் கால உதவி1077. ▶️சைபர் க்ரைம் உதவி எண்1930. இந்த மிக முக்கிய எங்களை உங்களது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News May 8, 2025

நீலகிரி: 20 பள்ளிகள் 100% தேர்ச்சி

image

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் நீலகிரி 85 பள்ளிகள் உள்ளது. அதில் 5 அரசு பள்ளிகள் உட்பட 20 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளில் 2,200 பேரில் 1,975 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை WAY2NEWSல் தொடர்ந்து பாருங்கள். (ஷேர் பண்ணுங்க)

News May 7, 2025

குன்னூரில் – மேட்டுப்பாளையம் சாலையில் விபத்து

image

குன்னூரில் – மேட்டுப்பாளையம் செல்லும் மலை பாதையில் பர்லியார் அருகே இன்று வேகமாக சென்ற  கார் இன்னொரு காரின் மீது மோதி சிறு விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு வாகனங்களும் சேதமடைந்தன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது . இதையடுத்து போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்தனர்.

error: Content is protected !!