News November 15, 2024

குன்னம் அருகே 10க்கும் மேற்பட்டோர் காயம்

image

குன்னம் வட்டம், கல்லமபுதூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் இன்று நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது புளிய மரத்தில் இருந்த கதண்டு வண்டுகள் கடித்து 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News

News March 2, 2026

பெரம்பலூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

image

பெரம்பலூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக்<<>> செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News March 2, 2026

பெரம்பலூர்: வாக்கு சேகருப்பில் ஈடுபட்ட மகளிரணி

image

பெரம்பலூர், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் நகரம் 1வது வார்டு பகுதியில், திமுக மகளிர் அணியை சேர்ந்தவர்கள் பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று, திமுகவின் ஐந்தாண்டு சாதனைகளை விளக்கி வாக்கு சேகரித்தனர். இதில், ஏராளமான மகளிர் கலந்துகொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

News March 2, 2026

பெரம்பலூர்: பிளஸ் 2 தேர்வு எழுதும் 7276 மாணவர்கள்

image

பெரம்பலூர், தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இதனையடுத்து, பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வை 82 பள்ளிகளை சேர்ந்த 3,783 மாணவர்களும், 3,493 மாணவிகளும் என மொத்தம் 7,276 பேர், 36 தேர்வு மையங்களில் எழுதுகிறார்கள். மாணவ – மாணவிகள் முதல் தேர்வாக தமிழ் தேர்வினை இன்று எழுதுகிறார்கள்.

error: Content is protected !!