News October 31, 2025
குனியமுத்தூரில் ரசம் சாப்பிட்ட தொழிலாளி பலி!

கோவை: குனியமுத்தூர், பி.கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (52), கூலித் தொழிலாளி. இவர் கடந்த 22ஆம் தேதி மது போதையில் இருந்தபோது, வீட்டில் ரசம் சமைத்துள்ளார். அப்போது, ரசப் பொடிக்கு பதிலாக தவறுதலாக சாணி பவுடரை (விஷம்) ரசத்தில் கலந்து சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து கோவை ஜிஹெச்சில் அனுமதிக்கப்பட்ட பெரியசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சம்பவம் குறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை!
Similar News
News October 31, 2025
கோவை வழியாக சிறப்பு இன்று முதல் ரயில் இயக்கம்!

பண்டிகை கால நெரிசலை சமாளிக்க பிகாரின் பரவுனியில் இருந்து எர்ணாகுளம் நோக்கி (05271) ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது அக்டோபர் 31 இரவு 8.30க்கு புறப்பட்டு நவம்பர் 3 காலை 6.00க்கு எர்ணாகுளம் சேரும். ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக செல்லும் இந்த ரயிலில் ஏசி, ஸ்லீப்பர், சாதாரண வகுப்புகள் அமைந்துள்ளன.
News October 31, 2025
கோவையில் நவம்பர் 1, 2 தேதிகளில் “நம்ம ஊரு திருவிழா”

கோவையில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் வ.உசி மைதானத்தில் நவம்பர் 1, 2 தேதிகளில் கோயம்புத்தூர் சங்கமம்–நம்ம ஊரு திருவிழா நடைபெறுகிறது. 400 கலைஞர்கள் பங்கேற்கும் இவ்விழாவை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்குவார். நாட்டுப்புற, இசை, நடன நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. இதில் மக்களை திரளாக கலந்து கொண்டு பாரம்பரியக் கலைஞர்களுக்கு உற்சாகம் அளிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்.
News October 31, 2025
கோவையில் டெண்டர் கோரிய தமிழக அரசு!

நாடாளுமன்றத் தேர்தலின் போது கோவை தொகுதியில் புதிதாக பிரம்மாண்ட கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. அதற்கேற்ப கோவையில் திமுக வெற்றி பெற்ற நிலையில்,இதனை தொடர்ந்து ஒண்டிப்புதூர் திறந்தவெளி சிறைச் சாலையில் 20.7 ஏக்கர் நிலம் மைதானம் அமைக்க தேர்வானது. இந்தநிலையில் மைதானத்திற்கான திட்டப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் சார்பாக டெண்டர் கோரப்பட்டுள்ளது.


