News September 14, 2024
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இருவர் கைது

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V.கிரண் ஸ்ருதி இ.கா.ப., பரிந்துரையின் பேரில், அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளிகள் 1.கோபிநாத் 2.குமார் ஆகியோர் இன்று (13.09.2024) குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News October 21, 2025
ராணிப்பேட்டை: காவல்துறையில் வீர வணக்கநாள் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினர் இன்று (அக்.21) காவலர் வீர வணக்க நாளை சிறப்பாகக் கொண்டாடினர். கடமையில் உயிர்நீத்த வீர காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் காவல் நிலைய வளாகத்தில் மரியாதை வணக்கம் செலுத்தப்பட்டது. பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பலர் பங்கேற்று வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்தனர்.
News October 21, 2025
ராணிப்பேட்டை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News October 21, 2025
ராணிப்பேட்டை: ரேஷன் கார்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு!

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <