News August 24, 2024
குட்டையில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு

நெமிலி அடுத்த மூலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவன். இவரது மகன் தினேஷ் (11) நெமிலி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பும், மகள் சுப்ரியா (10) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ஆம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில், 2 பேரும் அங்குள்ள மீன் குட்டையில் நீரில் மூழ்கி இன்று உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து நெமிலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News September 10, 2025
காவல் அலுவலகத்தில் குறை தீர்வு கூட்டம்

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 38 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஉறுதியளித்தார்.
News September 10, 2025
ராணிபேட்டை: திமிரி கொலை வழக்கில் இரட்டை ஆயுள்

ராணிபேட்டை மாவட்டம், திமிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மோசூர், நாகன்புரடை கிராமத்தில் தாய் மற்றும் தந்தையை கொலை செய்த வழக்கில் முரளிதரன் என்பவர் மீது திமிரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு 2000 அபராதம் விதிக்கப்பட்டது.
News September 10, 2025
ராணிப்பேட்டை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <