News May 29, 2024
குட்டி யானை தாயிடம் சேர்ந்தது

பந்தலூர் தாலுகா, கொளப்பள்ளி பகுதியில் இன்றைய தினம் ஒரு குட்டி யானை தவறி கிணற்றில் விழுந்தது குட்டி யானையை மீட்பதற்கு கிணற்றின் அருகே குழி தோண்டி சாலை போல் அமைத்து வனத்துறையினர் குட்டி யானையை மீட்டனர். கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குட்டி யானை வனப் பகுதிக்குள் சென்று தாய் யானையுடன் பத்திரமாக சேர்ந்தது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
Similar News
News November 11, 2025
நீலகிரி: தேனீக்கள் தாக்கி 6 பேர் படுகாயம்

நீலகிரி மாவட்டம், குன்னூர் வண்டிச்சோலை அருகே வனத்துறையின் நர்சரியில் நேற்று காலை 11 மணியளவில் தேன் கூடு கலைந்து தேனீக்கள் தாக்கின. அதில் வாட்சர் தவமணி (55) கடுமையாக காயமடைந்தனர். அவரை காப்பாற்ற வந்த வாட்சர் நந்தினி மற்றும் தற்காலிக பணியாளர்கள் உஷா, சுசீலா, ரஞ்சினி, புவனேஸ்வரி ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. ஆறு பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
News November 11, 2025
குன்னூர்: தேனி கொட்டியதில் வனத்துறையினர் காயம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தேனீக்கள் கொட்டியதில் வண்டிச்சோலை பாரஸ்ட் நர்சரி வனத்துறையில் பணிபுரியும் ஐந்து பேர் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளர்.
News November 10, 2025
நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நீலகிரி ஆட்சியரின் செய்தி குறிப்பில் திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்கள் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன் பெற்ற மாணவ மாணவியருக்கு 15,000 பரிசு தொகையும் பாராட்டு சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பங்கு பெறுபவர்களுக்கு வரும் 26 ஆம் தேதி அன்று திருக்குறள் முற்றோதல் போட்டி தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என்றார்.


