News February 27, 2026
குட்டி குரங்குக்கு அன்பை பொழிந்த கூகுள்

உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ள குட்டி ஜப்பானிய குரங்குக்காக கூகுள் அன்பு மழையை பொழிந்துள்ளது. ‘punch the monkey’ என கூகுள் தேடலில் டைப் செய்து பாருங்க. குட்டி குரங்கின் முகத்துடனான ஹார்ட் மழை பொழியும். பஞ்ச் என்ற இந்த குரங்கு, தனது க்யூட்டான் செயல்களால் இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. நீங்க டைப் பார்த்து உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News February 27, 2026
CINEMA 360: களத்தில் ‘அரசன்’

‘அரசன்’ படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் மார்ச்சில் தொடங்குகிறதாம் *வரும் சம்மர் சீசனில் (ஏப்ரல் அல்லது மே) ‘கருப்பு’ படம் வெளியாகும் என இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார் *‘சாட்டை’, ‘அப்பா’ படங்களை தொடர்ந்து ஸ்கூலை மையப்படுத்தி ‘ஸ்கூல் பஸ்’ என்ற படத்தை சமுத்திரக்கனி இயக்கவுள்ளார் *‘தலைவர் 173’ படத்தில் ரஜினியின் மகனாக மலையாள நடிகர் பேசில் ஜோசப் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
News February 27, 2026
கெஜ்ரிவால் மீதான ஊழல் வழக்கின் பின்னணி என்ன?

2021-ல் டெல்லியில் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த புதிய மதுபானக் கொள்கை மூலம் மதுபான விற்பனை முழுமையாக தனியார்மயமானது. இது அரசின் வருவாயை பெருக்குவதற்கு பதிலாக, தனியாருக்கு சாதகமாக மாற்றப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்காக கெஜ்ரிவால் உள்பட ஆம் ஆத்மியினர் ₹100 கோடி லஞ்சம் வாங்கியதாக CBI, ED வழக்கு தொடுத்தன. இந்நிலையில் ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இன்று(பிப்.27) இருவரையும் டெல்லி கோர்ட் விடுவித்தது.
News February 27, 2026
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

2 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹240 குறைந்து பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. ஆனால், தற்போதைய நிலவரப்படி சர்வதேச சந்தையில் மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது. 1 அவுன்ஸ் $3.91 உயர்ந்து $5,180 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் $2.89 அதிகரித்து $90.00 ஆக உள்ளது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம், வெள்ளி விலை உயரும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.


