News February 4, 2026
‘குட்டிக்கரணம் அடித்தாலும் திமுக ஆட்சிக்கு வராது’

தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவே, தினமும் ஒரு வெற்று அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிடுவதாக அன்புமணி சாடியுள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், கஞ்சா புழக்கம், மின் கட்டண உயர்வு என திமுக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் தோல்வியே என்று அன்புமணி கூறியுள்ளார். கொடுத்த வாக்குறுதிகளில் 13% மட்டுமே நிறைவேற்றியுள்ள திமுக, இம்முறை என்ன குட்டிக்கரணம் போட்டாலும் ஆட்சிக்கு வர முடியாது என விமர்சித்துள்ளார்.
Similar News
News February 7, 2026
8 குழந்தைகள் உள்பட 24 பேரை கொன்ற கிளர்ச்சி படை!

சூடான் உள்நாட்டு போரால் இடம்பெயர்ந்த மக்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது RSF என்ற கிளர்ச்சி படையினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில், 8 குழந்தைகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்த குழந்தைகளில் 2 பச்சிளம் குழந்தைகள் என்ற செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை உறுதி செய்துள்ள சூடான் டாக்டர்கள் குழு, மக்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்கும்படி சர்வதேச அமைப்புகளுக்கு வலியுறுத்தியுள்ளது.
News February 7, 2026
சிறிய அணியிடம் போராடி வென்ற பாகிஸ்தான்!

டி2O WC-ன் முதல் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய நெதர்லாந்து 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து விளையாடிய பாக்., அணியில், ஃபர்ஹான்(47) மட்டுமே குறிப்பிடதக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி 2 ஓவர்களில் 29 ரன்கள் தேவை என்ற நிலையில், 19-வது ஓவரில் பஹீம் அஷ்ரஃப் 24 ரன்களை விளாசி ஆட்டத்தை பாக்., பக்கம் திருப்பினார்.
News February 7, 2026
வில்லன் நடிகர் சுனில் தாபா காலமானார்

பாலிவுட்டில் ‘ஏக் தூஜே கே லியே’, தமிழில் விக்ரமின் ’10 எண்றதுக்குள்ள’ உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த வில்லன் நடிகர் சுனில் தாபா(66) மாரடைப்பால் இன்று காலமானார். நேபாளத்தில் பிறந்த அவர், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். ‘மேரி கோம்’ படத்தில் பிரியங்கா சோப்ராவின் கோச் கேரக்டரில் நடித்திருந்தார். சுனில் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


