News June 10, 2024
குட்கா விற்றதாக ஒருவர் கைது

ஆம்பூர் அடுத்த மோட்டு கொல்லை பகுதியில் நகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபர்ரனர். அப்போது ஷபியுல்லா என்பவர் கடையில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் 22 பாக்கெட். பான் மசாலா 27 பாக்கெட் வைத்திருந்ததாக ஷபியுல்லா மீது நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 15, 2025
திருப்பத்தூர்: கனமழை எச்சரிக்கை!

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் செப்.,17ம் தேதி கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்கவும். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!
News September 15, 2025
திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை கிராமத்தில் உள்ள கோடியூர் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன் இவரது மகன் நந்தகுமார் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில், நேற்று (செ.14) நந்தகுமார் தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது அப்பகுதியில் உள்ள மின்கம்பத்திலிருந்து எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
News September 14, 2025
திருப்பத்தூர் மாவட்ட இரவு ரோந்து பணி விபரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (செ.14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.