News April 8, 2025
குடும்ப பிரச்சனையால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

மேல்புலம் கிராமம் அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முனியப்பன் (55). நேற்று (ஏப்ரல்.07) குடும்ப பிரச்னை காரணமாக தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கலவை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் முனியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். (தற்கொலை எதற்கும் தீர்வல்ல)
Similar News
News April 16, 2025
ராணிப்பேட்டையில் இரவு ரோந்து போலீசார் பற்றிய தகவல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று காவலுக்கு இருக்கும் போலீசாரை பற்றிய பெயர் குறிப்பு மற்றும் அலைபேசி எண்கள் மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை ராணிப்பேட்டை பொதுமக்கள் எவையேனும் தேவை ஏற்பட்டால் நிச்சயமாக இந்த அலைபேசி எண்ணை உபயோகிக்கலாம் என காவல்துறை குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு புகைப்படத்தை பார்க்கவும்.
News April 16, 2025
ராணிப்பேட்டையில் அங்கன்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படும் 8 வட்டார குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 164 அங்கன்வாடி பணியாளர், 3 குறு அங்கன்வாடி பணியாளர், & 155 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்ய உள்ளன. விண்ணப்பங்களை <
News April 16, 2025
இந்தியாவில் கிளர்ச்சி ஏற்படும்; ஆற்காடு பஞ்சாங்கத்தில் தகவல்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தோப்புக்கான கங்காதர ஈஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி பெருவிழா நிறைவு மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்வு நடைபெற்றது. புது வருடத்தில் விவசாயம் செழிக்கும், கால்நடைகள் உற்பத்தி அதிகரிக்கும், குழந்தைகளுக்கு வியாதிகள் ஏற்படும், நல்ல மழை பெய்யும், விலைவாசி உயர்வால் நாட்டில் கிளர்ச்சி ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.