News December 30, 2024
குடும்ப நடத்த வர மறுத்த மனைவிக்கு வெட்டு; கணவன் கைது
ஓசூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவருக்கும் ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடி சேர்ந்த பிரித்தா ஆகிய இருவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த சில தினங்களுக்கு இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் பிரித்தா தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டார். இந்நிலையில் நேற்று பிரபு தனது மனைவியை வீட்டிற்கு அழைத்துள்ளார். அவர் வர மறுத்தால் கத்தியால் வெட்டியுள்ளார். போலீசார் பிரபு கைது செய்தனர்.
Similar News
News January 2, 2025
திமுக, அதிமுகவினர் மாறி மாறி போஸ்டர்
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வாணியம்பாடி சுற்று புற பகுதியில் இன்று (ஜன.02) காலை முதல் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் மாறி மாறி போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அதிமுக சார்பில் ‘யார் அந்த SIR?’ என்றும், திமுக சார்பில் ‘WE ARE SAFE IN TAMILNADU’ என்றும் போஸ்டர்களை ஓட்டி வருகின்றனர். மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
News January 2, 2025
திருப்பத்தூரில் நேற்று ஒரே நாளில் 3 விபத்து
திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 மணி நேரத்திற்குள் ஏலகிரி மலை கொண்டை ஊசி வளைவில் தடுப்பு சுவர் மீது மோதி சுற்றுலா வேன் கவிழ்ந்தது. ஆம்பூர் அருகே மாராப்பட்டு பகுதியில் சுற்றுலா சென்ற வேன் கவிழ்ந்து விபத்து மற்றும் நாட்டறம்பள்ளி என 3 வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் ஒருவர் உயிரிழந்தார். புத்தாண்டு தினத்தில் விபத்து ஏற்பட்டது குறித்து மக்கள் வேதனை தெரிவித்தனர்.
News January 2, 2025
புத்தாண்டில் பிறந்த 8 குழந்தைகள்
திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக திருப்பத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து கர்ப்பிணி பெண்கள் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று புத்தாண்டாடில் 8 குழந்தைகள் பிறந்ததாக அரசு மருத்துவமனை அலுவலர் தெரிவித்தார்.